மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் பட தயாரிப்பாளர் நடிகையிடம் செய்த குறும்பு; நடிகையின் பதிலால் ஷாக்கான நெட்டிசன்கள்.!
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படமான பிங்க் படத்தில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை,தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால் எடிட்டிங், டப்பிங் பணிகள் தற்சமயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது தெரிகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பிங்க் பட தயாரிப்பாளர் போனி கபூர் கலந்துகொண்டார். இவ்விழாவில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது விழா மேடையில் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை சந்தித்த போனிகபூர் திடீரென நடிகையின் பின்பகுதியை தட்டினார். இதனால் ஷாக்கான நடிகையின் முகம் மாறியது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் திரை உலகில் பிரபலமாக இருக்கும் மூத்த கலைஞர் இப்படியா நடந்து கொள்வது என்று முகம் சுழித்தனர். அதேவேளையில் திரைத்துறையில் இந்த மாதிரியான நிகழ்வுகள் சகஜம் தான் என்றும் சிலர் கூறினர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஊர்வசி ரவ்தெலா: ‘சமூக வலைத்தளங்களில் நானும் போனிகபூரும் இருக்கும் வீடியோவை வைத்து கேலி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஜென்டில்மேன். சமூக வலைத்தளங்களில் யோசிக்காமல் கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது. இப்படி செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். நான் போனிகபூர் மீது மரியாதை வைத்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலடியாக போனி கபூர் தட்டியபோது ஊர்வசி அளித்த ரியாக்ஷனை வெளியிட்டு பட சான்ஸுக்காக இப்பிடியாம்மா பல்டி அடிப்பாங்க என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.