"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தெறிக்கவிடும் விஸ்வாசம்! 7 நாள் வசூலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தின் 7 நாள் வசூல் 125 கோடி என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்கள் இந்த கூட்டணியில் உருவாகியுள்ளது. வீரம், வேதாளம் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றாலும், விவேகம் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்ததால் அஜித் ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பமும், நம்பிக்கையும் கலந்தே இருந்தது. தற்போது அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் விஸ்வாசம் படத்தின் வசூல் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த படத்தை தமிழகம் முழுவதும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தது. இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
.
#Viswasam125CroresVettai - Angali pangali ooda aadharavula #Viswasam has crossed 125 crores gross in TAMIL NADU alone by the end of today! Thank you makkaley 🙏#Thala #Ajith #Nayanthara @SathyaJyothi_ @directorsiva @immancomposer @DoneChannel1 @SureshChandraa pic.twitter.com/ziZV1RAZzv
— KJR Studios (@kjr_studios) January 17, 2019
விஸ்வாசம் படம் நன்றாக இருக்கிறது என்கிற விமர்சனம் எழுந்துள்ளதால், பலரும் குடும்பத்துடன் இப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதி நாட்கள் வருவதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.