"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
ரஜினி - சிவா படத்தில் இணையும் முன்னணி அழகு நடிகை! யார் அவர் தெரியுமா? புகைப்படம் உள்ளே.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினி காந்த். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் பேட்ட பட வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான சும்மா கிழி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு முத்து, எஜமான் படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் வேறு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.