மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதியை தொடர்ந்து தலைவருக்கும் வில்லனாகும் பிரபல தமிழ் நடிகர்; யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் முருகதாஸ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கி வருகிறார்.
பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் இந்தப் படத்தில ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், இசையமைபபாளராக அனிருத்தும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
ரஜினியின் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளது படக்குழு. மேலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மெகா கூட்டணி இணைந்துள்ள சந்தோசத்தில் இருக்கும் இயக்குநர் முருகதாஸ் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சமீபத்தில் பழநி முருகன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
ஆதலால், இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மேலும் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.