மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை..! பிரபல இயக்குநர் விளக்கம்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தநிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகிவருகிறது. அதில், பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், சுதா கொங்கரா, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அஜய் ஞானமுத்து உள்ளிட்டோரின் பெயர்கள் தளபதி 65 படத்துக்கான இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றன.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை. இது யாரு பார்த்த வேலைனு தெரியவில்லை என இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அருள் நிதி நடித்த டிமான்டி காலனி, நயன்தாராவின் இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப்படங்களை இயக்கினவர்தான் இயக்குனர் அஜய் ஞானமுத்து. தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.