மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன நினைச்சிங்க?.. நடிகையாக இருப்பது அவ்ளோ ஈசி இல்ல.. "என்னோட கஷ்டத்துல அவங்க கூட..." - நடிகை தமன்னா ஓபன்டாக்..!!
தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தமன்னா. இவர் பல வருடங்களாக நடித்துவரும் நிலையில், ஆரம்ப காலகட்டங்களில் உச்சத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது மிகக்குறைந்த அளவிலான படங்களிலேயே இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தமன்னா, தனது திரையுலக வாழ்வில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "எனது திரையுலக வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி தோல்விகளை நான் எதிர்கொள்வதற்கு எனக்கு பேருதவியாக இருந்தது எனது குடும்பத்தினர் என்றார்.
மேலும் நான் கஷ்டப்படும் சமயங்களிலும் அவர்கள் எனக்கு பக்க பலமாகவே இருந்தனர் என்றும், திரையுலக வாழ்வில் ஏற்படும் வெற்றி தோல்விகளை நமது சொந்த வாழ்வில் ஏற்படும் வெற்றி தோல்வியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறினார்.
அத்துடன் நான் ஒரு நடிகை எனும் பட்சத்தில் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் நான் என்னை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டதில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.