மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. தாமரையா இது.! மாடர்ன் உடையில் கணவருடன் போட்ட செம ஆட்டம்.! அதுவும் எந்த பாடலுக்கு பார்த்தீங்களா!!
நாடக கலைஞராக பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தாமரை. அவர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க ஒளிபரப்பான பிக்பாஸ் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். நிகழ்ச்சியில் அவரது வெள்ளந்தியான பேச்சும், செயலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை
ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து முழுதும் அறியாத அவர் பின்னர் புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடி கடுமையான போட்டியாளர்களுள் ஒருவராக டப் கொடுத்தார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் பிக்பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் 2 போன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு ஒருவாரம் முன் தோழி, தங்கைக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்த அர்ஜுன் மகள்; வைரல் கிளிக்ஸ்.!
கோவாவிற்கு சுற்றுலா
தாமரை அண்மையில் தனது கணவருடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். பெரும்பாலும் கிராமத்து உடையில் வலம் வரும் தாமரை செம மாடர்னாக மாறியுள்ளார். அவர் கணவருடன் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவர் தன் கணவருடன் புஷ்பா 2 பட பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்தியன் திரைப்படம்; திரையரங்கில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்த கமல் ரசிகர்கள்.!