மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிற்குள் மகன் கொண்டு வந்த பரிசு! ஆனந்தத்தில் கதறியழுத தாமரை!! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் தற்போது FREEZE டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த நாட்களில் அக்ஷரா, சிபி, நிரூப், பாவனி, ராஜு, பிரியங்கா குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் அடுத்தது யார் உள்ளே வரப்போகின்றனர் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாமரை வீட்டிலிருந்து வந்துள்ளனர். தாமரையின் மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவர் தனது அம்மாவிற்காக பூ வாங்கி வந்துள்ளார். தனது மகனைக் கண்டதும் தாமரை கதறியழுது பின் அவரை கட்டியணைத்து தனது பாசத்தை வெளிக்காட்டியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.