மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருவழியாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?? கசிந்த தகவல்!!
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையையே கலக்கி வருபவர் நடிகர் தனுஷ். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வரும் இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷ் 2004-ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு பிரிய போவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர்.
இவர்களது பிரிவு ரஜினி மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இருவரும் சேர்ந்து வாழ பல சமரச பேச்சு வார்த்தைகள் நடைபெற்று அது தோல்வியில் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களது மகன்களுக்காக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர உள்ளதாக பரவி வரும் தகவல் உண்மைதானா என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.