மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை பிரிந்தாலும், தன் முன்னாள் மாமனாருக்காக நடிகர் தனுஷ் செய்த விஷயம்.! நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடுவர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரையுலகிலேயே முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர். அதனை தொடர்ந்து இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்தாலும், முன்னாள் மாமனார் ரஜினியின் பிறந்தநாளில் நடிகர் தனுஷ், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா" என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
Happy birthday Thalaiva @rajinikanth 🙏🙏🙏🙏♥️♥️♥️
— Dhanush (@dhanushkraja) December 12, 2023