ஷெரீனை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் விபரீத முடிவு எடுத்த தர்சன்.! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ இதோ..



tharsan-eat-chilly-for-save-sherin

பிக்பாஸ் சீசன்3 90நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது . மேலும்  இறுதி கட்டத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை தட்டிசெல்லப்போவது யார் என அறிந்துகொள்ள  ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே இறுதிக்கட்டத்தில் இருந்தனர் . இதனை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. அதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக உழைத்தனர். அதில் முகேன் வெற்றி பெற்று நேரடியாக பின்னாலும் தேர்வு செய்யப்பட்டார்.

Tharsan

மேலும் அதனை தொடர்ந்து சேரன், ஷெரின், கவின் மற்றும் லாஷ்லியா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் சேரன் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனை தொடர்ந்து இன்று  தர்ஷனிடம் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என பிக்பாஸ் கேட்க, அதற்கு அவர் ஷெரின் என கூறுகிறார். மேலும் அதற்கு ஒரு பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என பிக்பாஸ் கூற அதையும் செய்கிறார். பின் சாண்டி அவர்களையும் காப்பாற்ற விரும்புகிறேன் என கூறி அவருக்காகவும் பச்சை மிளகாய் சாப்பிடுகிறார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.