மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவ்வளவா? ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் உற்சாகத்தில் மூழ்கிய தர்ஷன்!!பூரிப்புடன் வெளியிட்ட புகைப்படம்!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடங்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். மேலும் தனது நேர்மையான குணத்தாலும், வெளிப்படையான பேச்சாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் இவர்தான் பிக்பாஸ் இறுதி கட்டத்திற்கு சென்று பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறினார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல ரசிகர்களும் கண்ணீர் சிந்தினர்.
இவர் பிக்பாஸ் வெற்றியாளராக இல்லாவிட்டாலும், மக்கள் மத்தியில் வெற்றியாளராக வலம் வந்தார். இவருக்கு என ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளமும் உருவானது.
இலங்கையை சேர்ந்த இவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான பூச்செண்டுகள் மற்றும் அழகழகான பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தனர். இதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.
Thank you so much for all your love and support ❤️. #bestfansfamily pic.twitter.com/N4GKQg24ZF
— Tharshan shant (@TharshanShant) October 13, 2019