அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
இணையத்தில் தீயாய் பரவும் அசத்தல் புகைப்படம்!! பிக்பாஸ் தர்சனுடன் இருப்பது யார்னு தெரிகிறதா?
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வாரங்களுடன் முடிவடையுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 4 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எதிர்பாராத விதமாக கவின் வெளியேறினார். அதன் பிறகு இறுதிக்கட்டத்திற்கு சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்லுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் தர்ஷன் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடந்த ஞாயிறுக்கிழமை வெளியேறினார்.
இது ரசிகர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்சனுக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அவரது காதலி சனம் ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது தர்ஷன் அவரது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.