மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வசூலை வாரி இறைக்கும் தசரா படம்.! ஓடிடி ரிலீஸ் எப்போ? வெளிவந்த சூப்பரான தகவல்!!
தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நானி. அவர் நான் ஈ படத்தின் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் நடிகர் நானி தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
நானி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தசரா. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தசரா படத்தை எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய்குமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
தசரா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் தற்போது தசரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 27-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தசரா படம் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.