அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அது உண்மை இல்லை.! தளபதி-68 படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய்யின்68-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று ஒரு தகவல் பரவியது.
மேலும் இந்த திரைப்படத்தின் தலைப்பு தொடர்பாக சில வதந்திகள் பரவியது. ஆனாலும் அது உண்மையில்லை என்று ஏ.ஜி.எஸ் நிறுவனம் விளக்கம் ஒன்றை வழங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் நடிகர் கஞ்சா கருப்பு இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் வழங்கிய பேட்டியொன்றில் இதனை உறுதி செய்துள்ளார்.
நடிகர் கஞ்சா கருப்பு ஒரு திரைப்படத்தை சொந்தமாக தயாரித்து, அதில் ஒட்டுமொத்த பணத்தையும் இழந்து தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான், அவருக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.