மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படத்துல இப்படியா நடிப்பீங்க?.. விடுதலை பட நடிகரை தியேட்டரில் வைத்தே அடித்த ரசிகர்கள்..! மனைவி கண்முன்னே நடந்த சம்பவம்..!!
சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள சூரி, பவானிஸ்ரீ ஆகியோருக்கு இந்த திரைப்படம் முக்கிய படமாக அமைந்துள்ளது.
இதில் நடிகர் சேத்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் சின்னத்திரையில் நடித்து தமிழக அளவில் பிரபலமான நிலையில், தற்போது சிறிய அளவிலான படங்களிலும், சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
விடுதலை திரைப்படத்தை பொறுத்தவரையில் அவர் காவல் அதிகாரியாக கடுமையான, மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தை பார்க்கும் பலருக்கும் கோபம் வரும் வகையில் அவர் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருந்தார்.
இந்த நிலையில், சேத்தன் தனது மனைவி பிரியதர்ஷினியுடன் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றபோது, அங்கு படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் பலரும் அவரை அடிக்க பாய்ந்துள்ளனர்.
மேலும் ஒரு சிலர் அவரை அடித்ததாகவும் கூறப்படும் நிலையில், மனைவியும் படத்தில் எதற்காக இப்படி கடுமையாக நடந்து கொண்டீர்கள்? என்று திட்டி தீர்த்துள்ளார். இதனால் அவர் எதற்காக படத்திற்கு இப்போது வந்தோம்? சிறிது நாட்கள் கழித்து வந்திருக்கலாம் என்று யோசித்து இருக்கிறார்.