மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர்..தளபதியின் தெறி பட பாடல் படைத்த வேற லெவல் சாதனை! அதுவும் எந்த பாட்டு தெரியுமா? குஷியில் ரசிகர்கள்!!
தமிழ் திரையுலகில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, தற்போது முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டிப் பறப்பவர் தளபதி விஜய். அவரது நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் தெறி . இத்திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார்.
மேலும் இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா, பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி அவர்களுடன் நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார். அவர் தெறி படத்தில் நடிகர் விஜயின் சுட்டி மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் நைனிகாவின் நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
With #EenaMeenaTeeka hitting a 100 Million, the uber talented @gvprakash 's #Theri becomes the first ever Tamil album to have 2️⃣ video songs with more than 100 Million + Views 🔥#EnJeevan@actorvijay @Atlee_dir @Samanthaprabhu2 @iamAmyJackson @theVcreations #Nainika pic.twitter.com/uCjHnuZZ8L
— Think Music (@thinkmusicindia) May 22, 2021
மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி தெறி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதிலும் "ஈனா மீனா டீகா" பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது . இந்நிலையில் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் வாழ்த்து கூறி வருகின்றனர்.