மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
96 திரைப்படத்தை சன் டிவி ஒளிபரப்பக்கூடாது! நடிகை த்ரிஷா போர்க்கொடி!
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்ட 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. பலதரப்பு ரசிர்கர்களும் தங்களது ஆதரவை அளித்தனர்.
இந்நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமம் சன் தொலைக்காட்சியிடம் உள்ளது.
வரும் தீபாவளிக்கு சிறப்பு திரைப்படமாக 96 படத்தை சன் டிவி இல் ஒளிபரப்ப உள்ளது அந்த நிறுவனம். தீபாவளி (நவம்பர் 6) அன்று மாலை 6:30 மணிக்கு ‘96’ ஒளிபரப்பப்படும் என்று விளம்பரப்படுத்தியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷம் ஏற்பட்டாலும்,
படக்குழுவினர்க்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
படம் வெளியாகி இது எங்களுக்கு 5வது வாரம். இன்னும் அனைத்து திரையரங்குகளிலும் 80 சதவீதம் நிரம்புகிறது. இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். தயவு செய்து இதை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள் என்பது எங்கள் கோரிக்கை. செய்தால் நன்றியுடன் இருப்பேன் இவ்வாறு நடிகை த்ரிஷா தனது த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். #Ban96MoviePremierOnSunTv
Its our 5th week and we still have an 80% occupancy in all theatres.We as a team feel its unfair to be premiering 96 this early. Its our request to push it to a Pongal viewing pls @SunTV Will be grateful #96thefilm #Ban96MoviePremierOnSunTv
— Trish Krish (@trishtrashers) November 3, 2018