மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜயுடன் கில்லி படத்தில் இவர் தான் நடிக்க இருந்தாராம்! வெளிப்படையாக கூறிய பிரபல நடிகை!
தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அதிகம் பேசப்படுபவராகவும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர். இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.
இவர் தற்போது மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து விஜய் அவர்கள் சுதா கே பிரசாத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது விஜயுடன் சர்க்கார் படத்தில் இணைந்து நடித்த நடிகை துளசி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசியுள்ளார். அதாவது இதற்கு முன்பு விஜயுடன் கில்லி படத்தில் இவர் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் ஒரு சில காரணங்களால் நடிக்காமல் போனதாக கூறியுள்ளார்.
மேலும் சர்க்கார் படத்தின் இறுதி கிளைமேக்ஸ் காட்சியை விஜய் ஒரே டேக்கில் பேசி அசத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அப்படத்தில் விஜய் தன்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.