மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜயின் மீது புகார் அளித்த அவரது மகள்!.
கன்னட நடிகர் துனியா விஜயின் முதல் மனைவி நாகரத்னா. அவர்களுக்கு மோனிகா, மோனிஷா, சாம்ராட் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். நடிகர் துனியா விஜய்க்கும், மனைவி நாகரத்னா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து நடிகர் துனியா விஜய் கடந்த 2016ம் ஆண்டு கீர்த்தி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் துனியா விஜய் தன்னை தாக்கியதாக அவரின் மக்கள் மோனிகா கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தனது உடை, ஓட்டுநர் உரிமம் மற்றும் சில ஆவணங்களை எடுக்க விஜய்யின் வீட்டிற்கு சென்ற இடத்தில் அவர் தனது இரண்டாவது மனைவி மற்றும் 3 பேருடன் சேர்ந்து தன்னை திட்டி, தாக்கியதாக மோனிகா புகார் அளித்துள்ளார்.
நான் வீட்டிற்குள் நுழைந்ததும் விஜய், கீர்த்தி, ஹேமந்த், வினோத், அப்பாவின் டிரைவர் முகமது ஆகியோர் என்னை திட்டினார்கள். என் தலையை பிடித்து சுவரில் முட்டினார்கள் என புகார் அளித்துள்ளார் மோனிகா.
விஜய் உள்ளிட்டோர் தாக்கியதில் காயம் அடைந்த மோனிகா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.