திருவண்ணாமலை போறிங்களா? தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் விபரங்கள் இதோ.!
கார்த்திகை தீபத்திருநாள் பண்டிகைக்கு திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்லவுள்ளனர். பக்தர்களின் பயண வசதிக்காகவும், திருவண்ணாமலை மாநகரில் நடைபெறும் கொண்டாட்டங்களை கணக்கில் கொண்டும், பண்டிகை நாட்களில் பேருந்து நிலையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பல இலட்சக்கணக்கில் வரும் பக்தர்களை, பேருந்து நிலையத்தில் இருந்து மாநகருக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ, மினி பேருந்து சேவைகள் இயக்கப்படும்.
திருவண்ணாமலையில் செயல்படவுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தங்களின் விபரங்கள்
1) திண்டிவனம் சாலை - ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
செஞ்சி, திண்டிவனம். புதுச்சேரி, கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம் மார்க்கம் செல்லும் பேருந்துகள்
இதையும் படிங்க: குஷியோ குஷி.. 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
2) செங்கம் ரோடு மைதானம் - அத்தியந்தல் பேருந்து நிறுத்தம்
பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
3) செங்கம் ரோடு - சித்தர் சமாதி மைதானம்
ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
4) வேலூர் ரோடு - அண்ணா வளைவு
போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
5) சேத்துப்பட்டு ரோடு - செல்வபுரம் சிவகுமார் மைதானம்
சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
6) காஞ்சிரோடு - டான் பாஸ்கோ பள்ளி மைதானம்
காஞ்சி, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
7) வேட்டவலம் ரோடு - சர்வேயர் நகர்
வேட்டவலம், விழுப்பரம் செல்லும் பேருந்துகள்
8) திருக்கோயிலூர் ரோடு மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம்
திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
9) மணலூர்பேட்டை ரோடு - எஸ்.ஆர் ஸ்டீல் கம்பெனி எதிரில் உள்ள மைதானம்
மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
இதையும் படிங்க: "என் நெஞ்சமே பதறுகிறது" - திருவண்ணாமலை நிலச்சரிவு மரணங்களுக்கு, தவெக தலைவர் விஜய் இரங்கல்.!