மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Baakiyalakshmi Promo Breaking: ஆங்கிலத்தில் பிச்சி உதரவிடும் பாக்கியா; வெடவெடத்துப்போன ராதிகா..! இந்த வார பாக்கியலட்சுமி தொடரின் அசத்தல் ப்ரோமோ உள்ளே.!
இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அட்டகாசமாக வெளியாகியுள்ளது பாக்கியலட்சுமி தொடரின் ப்ரோமோ.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில், ரசிகர்களின் பேராதரவை பெற்று இன்று வரை பரபரப்பை தக்க வைத்துள்ள நெடுந்தொடர் பாக்கியலட்சுமி.
வெளி உலகத்தை அறியாமல் வீட்டோடு இருந்த பாக்யலட்சுமியின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்று வேலை செய்த கணவர் கோபியை எதிர்த்து ஒற்றை ஆளாய் தன்னை சிற்பி போல செதுக்கும் நாயகியின் செயல்பாடுகள் தமிழகமெங்கும் வரவேற்பை பெற்றுள்ளன.
இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கோபி சந்தோசமாக வாழ்வது போல நடித்தாலும், அவர்கள் கேட்கும் கேள்விகள் சிற்பியின் உளி போல பாக்யலட்சுமியை செதுக்கி வருகிறது. கடந்த வாரம் தங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என பாக்யலட்சுமியை ராதிகா தனது படித்த கர்வத்தால் மனதை நோகடிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதனால் தானும் ஆங்கிலத்தில் புலமைபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பாக்கியலட்சுமி, அதனை கற்றுக்கொண்டு ராதிகாவிடம் சொடக்கு போட்டு ஆங்கிலத்தில் பேசி அதிரவைக்கும் சம்பவம் தான் அடுத்த வார ப்ரோமோ காட்சிகளாக வெளியாகியுள்ளது.