மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று முதல் மீண்டும் தொடங்கிய தளபதி 66 படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகருள் ஒருவர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இன்று அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அதற்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.