இந்தியாவிலேயே மிக சிறந்த 3 நடிகர்கள் இவர்கள் தானாம்..! நடிகை திரிஷா சொந்த மூன்று பேர் யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் கடந்த 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. தற்போது 37 வயதாகவும் த்ரிஷா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார். கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 போன்ற படங்கள் இவர் கைவசம் உள்ளது.
மேலும், இயக்குனர் மணிரத்தினம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் த்ரிஷா. மேலும், ஊரடங்கில் தனது வீட்டிலையே இருக்கும் த்ரிஷா இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடுவது வழக்கம். அந்த வகையில் உங்கள் பார்வையில் இந்திய அளவில் சிறந்த 3 நடிகர்கள் யார் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன், மோகன்லால், அமீர்கான் என பதிலளித்துள்ளார் த்ரிஷா.