மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அலப்பறையின்றி திடீரென விஜயகாந்தை சந்தித்த டி.ஆர்!! என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒருகாலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் டி.ராஜேந்தர். மேலும் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தருக்கு சிலம்பரசன், குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர்.
இதில் இளையமகன் குறளரசன், சிலம்பரசன் நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்துஅவர் சில பாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் குறளரசன் ஒரு பெண்ணை காதலிப்பதாக தகவல் வெளிவந்தது. அவருக்காக சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கும் அவர் மாறியுள்ளார்.
அதனை தொடர்ந்து டி.ஆர் ஆர்பாட்டமின்றி திருமண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் நேற்று திருமணபத்திரிக்கை வைப்பதற்காக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜய்காந்த் இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய்காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர்-இசையமைப்பாளர்-நடிகர்-சகோதரர் விஜய.T. ராஜேந்தர் அவர்கள், எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம்.
— Vijayakant (@iVijayakant) April 5, 2019
குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள்.#டிராஜேந்தர் |#சிம்பு | #குறளரசன் pic.twitter.com/8fxPyOocc3