கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திருச்சியில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்; அதிர்ச்சியில் மக்கள்.. காவல்துறை விளக்கம்.!
காவேரியில் இருந்து ராக்கெட் லாஞ்சர் திருச்சி காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம், அந்தநல்லூர் பகுதியில் சிவன்கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலின் காவேரி படித்துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று கிடந்தது. பார்ப்பதற்கு ராக்கெட் லாஞ்சர் எனப்படும் உயர்ரக தாக்குதல் ஆயுதம் போல தோன்றியுள்ளது.
இதையும் படிங்க: "துரித உணவு உடல் நலனுக்கு எமன்" - ஆசையாக வாங்கி சாப்பிட்டு 18 வயதில் அகால மரணம்.. திருச்சியில் சோகம்.!
நேரில் ஆய்வு
இதனையடுத்து, உள்ளூர் காவல்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள், மர்ம பொருளை ஆய்வு செய்தனர். அப்போது, அது ராக்கெட் லாஞ்சர் என்பது உறுதி செய்யப்பட்டது.
1960ல் பயப்படுத்தப்பட்டது
இதனையடுத்து, தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பார் வருண் குமார், நேரில் வந்து ஆய்வு செய்தார். பின் இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கூறிய ராக்கெட் லாஞ்சர், கொரியா போரில் 1960 காலகட்டத்தில் அமெரிக்காவால் கொரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
சம்பாவிதம் தவிர்ப்பு
இந்த லாஞ்சர் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என தெரிவித்தார். அது தற்போதைக்கு வெடிக்கும் நிலையுடன் இல்லை எனினும், மக்கள் முன்னதாகவே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஏன் இரங்கல் தெரிவிக்கல?" - விஜயை வார்த்தைகளால் வறுத்தெடுத்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்.!