மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2K கிட்ஸ்களின் எழுச்சி நாயகன்; டி.டி.எப் வாசன் நடிப்பில் மஞ்சள் வீரன் திரைப்படம்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்ஸ்டாகிராமில் பைக் பயணங்கள் சம்பந்தமான வீடியோ பதிவிட்டு தமிழக இளைஞர்களிடையே பிரபலமான நபர் டி.டி.எப் வாசன். இவர் தனது பின்தொடர்பாளர்களை தங்கங்களே, தம்பிகளே என்று அன்போடு அழைத்து வந்தார்.
இவரின் மீதான பாசத்தில் பல நபர்கள் அவர் சந்திக்கும் இடங்களில் குவிந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதால், தனது அன்பு தம்பிகளின் செயல்பாடுகளால் பல இடங்களில் வழக்குப்பதிவு வாங்கி இருந்தார்.
இவர் விரைவில் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், அவை உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடலூர் நகரை சேர்ந்த தயாரிப்பாளரின் இயக்கத்தில் டி.டி.எப் வாசன் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இன்று டி.டி.எப் வாசனின் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.