மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"யோகி பாபு மகள் பிறந்த நாள் விழாவில் உதயநிதி ஸ்டாலின்!" வைரலாகும் புகைப்படங்கள்!
2009ம் ஆண்டு "யோகி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகி பாபு. தொடர்ந்து தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், தூங்கா நகரம், கலகலப்பு, அட்டக்கத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு, தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். பொம்மை நாயகி, லக்கி மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் யோகி பாபு. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், யோகி பாபு தனது இரண்டாவது மகள் பரணி கார்த்திகாவின் முதல் பிறந்த நாளை நேற்று மிக எளிமையாகக் கொண்டாடினார். இவ்விழாவில் விஜய் டிவி பிரபலங்கள் பாலா, தாம்சன், தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
மேலும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார். இவ்விழா தொடர்பான புகைப்படங்களை அனைவரும் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இப்புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.