மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... ஒரு எபிசோடுக்கு மட்டும் விஜே மணிமேகலை வாங்கும் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
சன் மியூசிக்கில் விஜேவாக இருந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இதனை தொடர்ந்து சன் டிவி, கே. டிவி, சன் நியூஸ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவரது திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினர். அதனை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்யும் ரகளைகள் ரசிகர்களை ரசிக்க செய்தன.
இந்நிலையில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் மணிமேகலை சில மாதங்களுக்கு முன்பு , விலைஉயர்ந்த BMW காரை வாங்கி இருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் hyundai புதிய காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஒரு எபிசோடிற்கு ரூ. 60,000 வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.