விஜய், அஜித்தை ஓரம் கட்டிய தனுஷ்!!  மில்லியன் பார்வைகளை கடக்கும் "வா வாத்தி"!!



Vaa Vaathi Song views more than 1000 million

"வா வாத்தி" பாடல் யூடியூப்பில் இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்திற்கு G V பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் விதமாகவே இருந்தது.

இருந்த போதிலும், "வா வாத்தி" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மிகவும் வைரலானது. இந்த நிலையில், தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது. 

இதனால், 100 மில்லியன் கடந்து அதிக பார்வைகளுக்கு சொந்தக்காரர் என்ற லிஸ்டில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார்.