ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!



TJ Gnanavel Latest SPeech 19 Feb 2025 


கோமளா ஹரி பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜோஸுவா சேதுராமன் இயக்கத்தில், நடிகர்கள்லீஜுமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா, ராஜீவ் காந்தி, தாரணி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜென்டில்உமன். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஜென்டில் உமன் (Gentle Woman) படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் டிஜே ஞானவேல் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். 

ஜென்டில் உமன் டீசர்

இதையும் படிங்க: கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.! 

அவர் பேசுகையில், "ஜென்டில் உமன் படம் நன்றாக வந்துள்ளது என நினைக்கிறன். எய்ட்ஸில் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட முதல் இரண்டு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என தரவுகள் கூறுகிறது. டேய்.. நீங்கள் கற்பு, கலாச்சாரம், ஒருவனுக்கு ஒருத்தி என பேசுகிறீர்கள். 

கற்பனையில் இருக்க வேண்டாம்:
அப்பறம் ஏன் எய்ட்ஸ் விஷயத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பெண்களை தெய்வமாக கூறுகிறீர்கள், அதேபோல உண்மையில் மதிக்கிறீர்களா? எண்ணம் - செயல் ஒருசேர இருக்கிறதா? கற்பனையில் ஏன் இப்படி செயல்படுகிறீர்கள். 

இவ்வாறான கற்பனை தன்மையை மாற்றும் முயற்சியை வரவேற்க வேண்டும். ரிசப்ஷனில் இன்று வரை பெண்கள் தான் இருக்கிறீர்கள். 2 ஆண்கள் அங்கு இருந்தால் குடி முழுகிவிடுமா? உலகம் அழிந்துவிடுமா?. இன்று சிந்திக்க வைப்பு தராத விஷயங்களை ஜென்டில் உமன் கொண்டு வந்துள்ளது. படத்தில் நடித்த அனைவர்க்கும் நன்றி" என பேசினார்.

டிஜே ஞானவேல் பேசிய காணொளி

இதையும் படிங்க: செல்பி எடுக்க வந்த ரசிகைக்கு உதட்டில் இச்.. பதறிப்போன பெண்.. லீக்கான வீடியோ.! சர்ச்சையில் பாடகர்.!