மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்புவால் கைவிடப்பட்டது தனுஷிற்கு கிடைத்தது எப்படி..!!
தனுஷ் மற்றும் சிம்புவுக்கு இடையே எப்போதும் ஒரு விதமான மோதல் இருக்கிறது என்பது ரசிகர்களால் பெரிதும் நம்பப்படுகிறது. இதற்கு அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சில சம்பவங்களே காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சிம்புவால் கைவிடப்பட்ட ஒரு விஷயம் தனுஷால் நிறைவேற்றப்பட்டுள்ளதை தனுஷ் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி சமீபத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘வடசென்னை’. இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை தனுஷிற்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்த ஆடுகளம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். மேலும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் பேசும்போது, ‘வடசென்னை’ திரைப்படம் பல வருடங்களுக்கு முன் வெற்றிமாறன் உருவாக்கிய கதை. பொல்லாதவன் படத்திற்குப் பிறகு வடசென்னை படத்தை எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அப்போதைய சூழ்நிலை சரியில்லாததால் வேண்டாம் என்று முடிவு செய்து ஆடுகளம் படத்தை எடுத்தோம்.
பின்னர் மீண்டும் நாங்கள் தொடர்ந்து இணைய வேண்டாம் என்று முடிவு செய்து சிறு இடைவெளி விட்டோம். சில நாட்கள் கழித்து ‘வடசென்னை’ படத்தை சிம்புவை வைத்து எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், படத்துல குமார்னு ஒரு பவர்ஃபுல் கேரக்டர் வருது, அதை என்னைப் பண்ணச் சொல்லியும் வெற்றிமாறன் என்னிடம் கேட்டார். நான் அப்போது எனக்கு பெருந்தன்மை இருக்கிறது. ஆனால், அந்தளவிற்கு இல்லை, தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறி நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.
பின்னர் சில காரணங்களால், சிம்புவும் நடிக்க முடியாமல் போனது. 2003ல் ஆரம்பித்தது சுற்றி சுற்றி கடைசியாக என்னிடமே வந்து விட்டது. என்று தனுஷ் கூறினார்.