மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. பாரதிராஜாவுக்கு என்னதான் ஆச்சு?.. மருத்துவமனைக்கு சென்ற வைரமுத்து பரபரப்பு பரபரப்பு பேட்டி..!!
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கமடைந்ததால், ஒரு நாள் மதுரையிலேயே ஓய்வெடுத்து பின் சென்னைக்கு திரும்பினார். இதன் பின்னர் நீலாங்கரையில் இருக்கும் தனது இல்லத்தில் ஓய்வெடுத்த அவருக்கு, மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் பாரதிராஜா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பாரதிராஜாவிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அத்துடன் அவர் மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனால் அவரை நலம் விசாரிப்பதற்காக அங்கு சென்று கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசிய போது, "பாரதிராஜாவுக்கு நெஞ்சு சளி இருக்கிறது. மற்றபடி ஒன்றுமில்லை. நன்றாக பேசுகிறார். ஆளை அடையாளம் கண்டு கொள்கிறார். விரைவில் நலமுடன் வீட்டிற்கு வருவார்" என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் ரசிகர்கள் அச்சோ என்னாச்சு? விரைவில் நலம்பெற வேண்டும் என கூறி வருகின்றனர்.