மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. வேற லெவல்! ஒவ்வொரு செகண்டும் வெறித்தனம்! மிரளவைக்கும் அஜித்தின் வலிமை ட்ரைலர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா அசத்தலாக இசையமைத்துள்ளார்.
வலிமை திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வலிமை பட அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
இதில் அஜித் மற்றும் வில்லன் நடிகர் கார்த்திகேயா பேசும் டயலாக்குகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விசில் பறக்க வைக்கிறது. மேலும் வலிமை ட்ரைலர் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு நிமிடமும் வெறித்தனமாக ஆக்சன் மிகுந்து பட்டையை கிளப்புகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.