மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன்னை கேலி செய்து பரவிய மீம்ஸை ஜாலியாக பகிர்ந்த வனிதா! அப்படி என்னனு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சில செயல்களால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளரானார்.
பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மூன்றாவது திருமணம், விவாகரத்து என பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் வனிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் வனிதா அண்மையில் தன்னை குறித்து வந்த மீம்ஸ் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.