மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பயங்கர ரொமான்ஸாக ஹனிமூன் கொண்டாட்டத்தில் விக்கி- நயன் ஜோடி! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாரா ஏழு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் அண்மையில் மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாழ்த்து கூறினர். திருமணம் முடிந்த கையோடு நேராக இருவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யப் புறப்பட்டனர். அங்கு மாடவீதிகளில் நயன்தாரா காலணி அணிந்து நடமாடியதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அதற்காக விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கேரளாவிற்கு மறுவீடு சென்றிருந்தனர். இந்நிலையில் அவர்கள் தற்போது ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றுள்ளனர் அங்கு பிரபல ஹோட்டலில் தங்கிருக்கும் அவர்கள் ரொமான்டிக்காக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாகி வருகிறது.