மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகளின் முன்பு நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்.. வைரலாகும் புகைப்படம்.?
2012ம் ஆண்டு "போடா போடி" திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும், பாடலாசிரியராகவும் உள்ளார் இவர்.
இதையடுத்து 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய "நானும் ரவுடி தான்" திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.
தொடர்ந்து 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் இவர்கள் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்ட இவர்கள், குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் மகன்களின் முன்பு நயன்தாராவுடன் கொஞ்சும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 'விக்கி ஒரு பொறுப்பான அப்பாவாக நடந்துக்கோங்க' என்று கிண்டலாக கமெண்ட் செய்துவருகின்றனர்.