மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமாகி 5 வருஷத்துக்கு அப்பறம் தான்.., லேடி சூப்பர்ஸ்டார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பகீர்..!!
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் இருவரும் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளையும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமாகும் நிலையில், வாடகை தாயின் மூலமாக இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அத்துடன் திருமணத்திற்கு முன்னரே இவர்கள் பிளான் செய்துதான் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார்கள் என்ற சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருமணமான 5 ஆண்டுகளுக்கு பின்னரே வாடகைதாய் மூலம் குழந்தை பெற முடியும். நயன்தாரா - விக்னேஷ் சிவன் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.