உலக பட்டினி தினத்தை முன்னிட்டு... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதிகளிலும் செய்த காரியம்.! குவியும் பாராட்டுக்கள்.!



vijay-announced-a-new-scheme-for-poor-people-dring-worl

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்டிருப்பது இவர்தான். தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவரது 68-வது திரைப்படத்திற்கான அறிவிப்பும் கடந்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பே தன்னுடைய ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார் தளபதி விஜய். இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் கூட 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்ட வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை  வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது.

thalapathyvijay

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் மக்கள் இயக்கம்  தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு  வருகின்ற மே மாதம் 28ஆம் தேதி மதிய உணவு வழங்க திட்டமிட்டு இருக்கிறது. இந்தத் திட்டமானது தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற பெயரில்  வருகின்ற 28ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து நகரம் மற்றும் ஒன்றியம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

thalapathyvijay

இது தொடர்பான அறிக்கையை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்த அறிக்கையில் பசியால் வாடும் மக்களுக்கு பசியை போக்கவும் பசியினை போக்கும் விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் எதிர்கால அரசியல் திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே இதுபோன்று செயல்படுவதாகவும் சிலர் இதற்கு விமர்சனம் தெரிவித்துள்ளனர்.