மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதை கூட செய்திருக்க மாட்டேனே.! மறைந்த மகளுக்காக விஜய் ஆண்டனியின் மனைவி வெளியிட்ட கண்கலங்க வைக்கும் பதிவு.!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டு வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது பாடல்கள் மற்றும் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா. இவருக்கு மீரா, லாரா என இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.
மீரா சர்ச் பார்க் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென செப்டம்பர் 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மறைவால் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர். மகளைப் பறிகொடுத்து மீள முடியாத சோகத்தில் இருந்த போதும், நடிகர் விஜய் ஆண்டனி பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தனது மகளுக்காக வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு கண்கலங்க வைத்துள்ளது. அதில், நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என தெரிந்திருந்தால், நான் உன்னை எனக்கு அருகிலேயே வைத்திருந்திருப்பேன், சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டியிருக்க மாட்டேன், இப்போது உனது எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியாது, அம்மா, அப்பாவிடம் திரும்பி வந்துவிடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கமே என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.