Breaking: நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு... அதிரடி தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றம்...



Vijay case over today

நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து சொகுசு கார் ஒன்றை கடந்த 2005-ம் ஆண்டு இறக்குமதி செய்தார். இந்த காருக்கு செலுத்தவேண்டிய நுழைவு வரியினை செலுத்த விஜய் தாமதப்படுத்திய நிலையில் வணிக வரித்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும், ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

vijay

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களை விசாரித்து இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம். அதாவது இறக்குமதி காருக்கு 2019-க்கு முன் முழு நுழைவு வரியை செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்றும் 2019-ம் ஆண்டுக்கு பின்னும் நுழைவு வரி செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கலாம் என்ற வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.