அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
தல படத்திற்காக, இந்த தளபதி ரசிகர்கள் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா! வாயடைக்கவைத்த ஷாக் புகைப்படம் இதோ!!
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது.
இந்நிலையில் தல படத்திற்கு வாழ்த்து கூறி தளபதி ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். மேலும் தல தளபதி ரசிகர்கள் இருஎதிர் துருவங்களாக சமூகவலைத்தளங்களில் கடுமையாக தாக்கி மோதிக்கொள்ளும் நிலையில் விஜய் ரசிகர்கள் அஜித்தின் படத்திற்காக பேனர் வைத்தது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .மேலும் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.