மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய் கையில் செம கியூட்டாக அமர்ந்திருக்கும் குழந்தை.! யாருடைய வாரிசு தெரியுமா?? வைரல் புகைப்படம்!
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். எமோஷனல் குடும்பப் படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஹீரோயினாக, விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம் , ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்திற்கு இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதியில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்புகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தின் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் விஜய் கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பெருமளவில் பரவி வந்தது. அது யாருடைய குழந்தை என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அந்த குழந்தை தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தையாம். அப்புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.