மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏழை பெண்ணிற்காக நடிகர் விஜய் செய்த காரியம்! பெருமிதத்தில் விஜய் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் தளபதி, தென்னிந்திய சினிமாவின் அடையாளம்தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தயாராகிவரும் சர்க்கார் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பொதுவாக நடிகர் விஜய் என்றாலே அமைதியானவர், அடக்கமானவர் என பலர் சொல்ல கேட்டிருப்போம். அதேபோல சமூக சேவைகள் செய்வதிலும் நடிகர் விஜய் மிகவும் பிரபலமானவர்.
நடிகர் விஜய் தான் செய்யும் பல நல்ல விஷயங்களை வெளியில் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா வீட்டிற்கும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவர்களின் வீட்டிற்கும் இரவோடு இரவாகத்தான் நடிகர் விஜய் சென்றார்.
இந்நிலையில் தற்போது விஜய் சத்தமே இல்லாமல் இன்னொரு வேலையை செய்திருக்கிறார். சென்னை ராமாபுரத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணியாற்றும் ஒரு பெண், பணி முடித்து அதிகாலை திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவரின் சிகிச்சைக்கு பணம் இன்றி இருந்ததை அறிந்த விஜய், உடனே 8 லட்சம் கொடுத்து அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் தற்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.