மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது முதல் சம்பளத்தில் விஜய் வாங்கிய பரிசு! அதற்குமுன் அவர் கேட்ட கேள்வியை பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டிப் பறப்பவர் நடிகை விஜய்.. இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் அப்படம் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபனா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் விஜய் குறித்த பல சுவாரஷ்யமான தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் விஜய்க்கு மிகவும் பிடித்த உணவும் தோசை மற்றும் மட்டன். விஜய் சிறுவயதில் செம சுட்டித்தனமாக இருப்பார். அவரது சுட்டித்தனமெல்லாம் அவரது தங்கையின் இறப்பிற்குப் பின்பு முற்றிலும் காணாமல் போய்விட்டது.
மேலும் விஜய் தனது முதல் சம்பளத்தில் அவரது அம்மாவிற்கு புடவை எடுத்துக்கொடுத்துள்ளார். ஆனால் புடவை எடுப்பதற்கு முன்பு அவரது அம்மாவிற்கு போன் செய்து உங்களுக்கு புடவை என்ன அளவு என்றும் கேட்டுள்ளார். அதன் பிறகு அதற்கு புடவைக்கு அளவுலாம் கிடையாது என அவரது அம்மா கூறியுள்ளாராம். மேலும் ஷோபனாவுக்கு அவரது மகன் விஜய்யுடன் சேர்ந்து பாடல் பாடுவதற்கும், அவருக்கு தாயாக நடிப்பதற்கும் ஆசையாக உள்ளதென அவர் கூறியுள்ளார்.