மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவினுடன் காதலில் விழுந்த விஜய் பட நடிகை.?! அவரே வெளியிட்ட போஸ்ட்டால் ஆச்சர்யம்.!
அபர்ணாதாஸ் என்பவர் ஒரு தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த என்ஜன் பிரகாஷன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம்
நடிகையாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இவர் கடந்த வருடம் வெளியான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பின்பு டாடா திரைப்படத்தில் பிக்பாஸ் கவினுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.
டாடா திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தை கவினுக்காகத்தான் நடித்தேன் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். மேலும் "எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் கவினுக்கு நன்றி. கவின் எப்போதும் அதிகமாக கோபப்படுவார் என்று பல நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறேன். ஆனால் தேவையான நேரத்தில் மட்டுமே கோபப்படுவார் என்று இப்படத்தில் இவருடன் இணைந்து நடித்ததை பற்றி தெரிந்து கொண்டேன். டாடா படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" என்று பதிவிட்டு இருக்கின்றார்.
அத்தகைய நிலையில் டாடா படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் இருவரின் கதாபாத்திரமும் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக கவரப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்த சில நாட்களிலேயே நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் அபர்ணாதாஸ் இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கவினும், அபர்ணாதாசும் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.