மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நோ நண்பா.. இதெல்லாம் பண்ணாதீங்க.! ரசிகர்களுக்கு நடிகர் விஜய் விடுத்த அதிரடி உத்தரவு!! என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு முன்னணி நடிகராக, தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் அரசியலுக்கு வரவிருப்பதாக சிலகாலமாக பலமாக பேச்சுகள் அடிபட்டு வருகிறது. மேலும் அதற்கேற்றார் போல் அவரது செயல்பாடுகளும் உள்ளது. இந்த நிலையில், வரும் 17 ம் தேதி நாளை சனிக்கிழமை 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன் நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.
மேலும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான பணிகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மும்முரமாக கவனித்து வரும் நிலையில் இந்த விழாவிற்காக பேனர் மற்றும் கட் அவுட்டுகளை வைக்க கூடாது என நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம். அதனால் விழா நடைபெறும் நீலாங்கரை பகுதியில் விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரம் மேற்கொண்டு வருகின்றனர்.