மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சமீப காலமாக வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகரான விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே விஜய் சேதுபதி, ரஜினிக்கு வில்லனாக பேட்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் தலைவர் 171 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் நல்லா இருக்கும் என எண்ணியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால் இனிமேல் ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி ஒரு முடிவில் இருக்கும் காரணத்தால் தலைவர் 171 படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.