மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல முன்னணி நடிகையின் படத்தில் அசத்தவிருக்கும் விஜய்சேதுபதி! வெளியான சூப்பர் தகவல்!
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதனை தொடர்ந்து அவர் காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை டாப்ஸி தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். அதுமட்டுமின்றி அவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை டாப்ஸி தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதையிலும், தமிழில் ஜெயம் ரவியுடன் ஜன கண மன என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக இருந்த தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர், நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் ஆவார்.
இந்த படத்தில் டாப்ஸி முன்னணி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.