மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடவுள் மனசு சார் உங்களுக்கு.. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி செய்த நெகழ்ச்சி காரியம்! கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் குறுகிய காலகட்டத்திலேயே தனது திறமையால், விடாமுயற்சியால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக, மக்கள் செல்வனாக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவருக்கென தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று சிறப்பாக நடித்து அனைவரையும் அசர வைக்ககூடிய விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் மிரட்டி வருகிறார். விஜய்சேதுபதிக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது பட வாய்ப்புகள் குவிகிறது. இவ்வாறு புகழின் உச்சியில் இருக்கும் விஜய்சேதுபதிக்கு சிறுவர்களும் ரசிகர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் தான் விஜய்சேதுபதியின் ரசிகன் எனவும், அவரை பார்க்க ஆசைபடுவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அறிந்த விஜய் சேதுபதி அந்த சிறுவனை குடும்பத்தோடு தனது வீட்டிற்கு வரவழைத்து சந்தித்துள்ளார். மேலும் அந்த சிறுவனை கட்டியணைத்து முத்தமிட்டு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.